News August 6, 2024
சசிகலா பேரணி என்ன ஆனது?

தேர்தல்களில் அதிமுக பின்னடைவை சந்தித்ததை
சுட்டிக்காட்டி, கட்சிக்குள் இருக்கும் பிளவுதான் இதற்கு காரணம், அதனால் கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த பேரணி செல்லப்போவதாக சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசியில் கடந்த மாதம் 17ஆம் தேதி பேரணியையும் தொடங்கினார். ஆனால், அதன்பிறகு சத்தமே இல்லை. இதனால் தற்போது பேரணியை சசிகலா தொடர்கிறாரா, இல்லையா எனத்தெரியாமல், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Similar News
News January 20, 2026
சற்றுமுன்: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

கூட்டணி முடிவை இறுதி செய்யாத IJK, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டது. இந்நிலையில், NDA கூட்டணியிலேயே தாங்கள் தொடர்வதாக IJK நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அழைப்பு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 6 சீட்கள் வரை கேட்டுள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
ஆன்லைனில் EB பில் கட்டுவதற்கு முன் இத படிங்க!

EB பில் தொடர்பாக போலி SMS சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பகிரப்படுவதால், போலியான லிங்க் மூலம் பில் கட்டி ஏமாற வேண்டாம் என TNEB அறிவுறுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்க் உடன் மெசேஜ் வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான TNEB செயலி & அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே EB பில் கட்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.
News January 20, 2026
ஆண்கள் பாவமில்லையா? செல்லூர் ராஜு

வயதான, பாவப்பட்ட ஆண்கள் இருக்க மாட்டார்களா? அதனால்தான், பேருந்துகளில் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாக செல்லூர் ராஜு பேசியுள்ளார். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அதிமுக, அவர்களுக்காக பாடுபடுகிறது என்ற அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து திமுக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என்றார். மேலும், திமுக போல தகுதி பார்த்து நலத்திட்டங்களை வழங்குவதில்லை என கூறியுள்ளார்.


