News August 6, 2024

Olympics Day 12: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம், ஹாக்கி ஆகிய 5 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மல்யுத்தத்தில் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) வினேஷ் போகத் ஜப்பானின் சுசாகி யூயுடன் மோதவுள்ளார். மாலை 3.20 மணிக்கு நடைபெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா களமிறங்கவுள்ளார்.

Similar News

News January 27, 2026

முதலிரவில் குழந்தை பிறந்தது

image

உ.பி.,யில் முதலிரவின்போது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்களான இருவரும் திருமணத்துக்கு முன்பே நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் கருவுற்றது தெரியவர, இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

News January 27, 2026

FTA ஒப்பந்தம்.. தமிழகத்திற்கு ஏற்படும் பயன்

image

ஐரோப்பிய யூனியன் உடனான <<18973435>>FTA ஒப்பந்தத்தால் <<>>இந்திய ஜவுளித்துறை பெரிதும் பலனடையும் என கூறப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு 10% சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் படிப்படியாக வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்வோர், வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் போட்டியை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

News January 27, 2026

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு அல்வா விழா

image

மத்திய பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற அல்வா விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அல்வா பரிமாறுவது வழக்கம். இது முடிந்ததும், பட்ஜெட் ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், அதிகாரிகள் தனிமைப்படுத்தப்படுவர். வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!