News August 6, 2024

₹4,717 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

image

2024-25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 128% அதிகரித்து ₹4,717 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் புள்ளிவிவரப்படி, முந்தைய காலாண்டில் ₹37,599 கோடியாக அதன் வருமானம் 2.4% அதிகரித்து ₹38,506 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி, வரிகள், தேய்மானம் & கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் (Ebitda) ₹19,365 கோடியில் இருந்து ₹19,708 கோடியாக 1.8% அதிகரித்துள்ளது.

Similar News

News February 23, 2026

பள்ளிகளில் இனி கட்டாயம்.. அதிரடியாக பறந்த உத்தரவு

image

CBSE பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை கட்டாய மனநலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளை கண்டறிதல், தற்கொலை எண்ணத்தை தடுத்தல் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும், இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் CBSE நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News February 23, 2026

பாத வெடிப்புக்கு Quick தீர்வு.. DO THIS!

image

➤காய்ந்த வேர்க்கடலை தோல்களை பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதில் தேங்காய் எண்ணெய், தேன், சிறிது பச்சைப் பால் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் அரைக்கவும் ➤பிறகு கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பேஸ்ட்டை தடவுங்கள் ➤20 நிமிடங்கள் கழித்து பேஸ்ட்டை குளிர்ந்த கழுவி, மாய்ஸ்சரைசர் தடவி, சாக்ஸ் அணியவும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்யுங்கள். SHARE.

News February 23, 2026

மாணவியை நண்பர்களே கூட்டு பலாத்காரம்.. SHOCKING

image

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பெங்களூருவில் 2 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் BA முதலாமாண்டு படித்து வரும் மாணவிக்கு, இன்ஸ்டா மூலம் டிக்சன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். காதலர் தினமான பிப்.14 அன்று, சொகுசு வில்லாவிற்கு மாணவியை அழைத்து சென்ற சாண்டோ, போதை மாத்திரையை வாயில் திணித்து தனது நண்பருடன் வன்கொடுமை செய்துள்ளான். கொடூரம்!

error: Content is protected !!