News August 5, 2024
உள்ளாடைகளை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் செய்த செயல் முகம்சுளிக்க வைத்துள்ளது. வீட்டிலிருந்த பொருட்களை தூக்கிச் சென்ற அவர்கள், உள்ளாடைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இட ஒதுக்கீட்டிற்காக போராடும் மாணவர்கள் ஏன் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்யவேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.
News March 14, 2026
எங்கள் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்னை? ராஷி கண்ணா

எந்தவொரு பெண்ணுக்கும் தனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் உண்டு என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். <<19291889>>நடிகைகளின் உடை அணியும் பாணி <<>>குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது என்றார். அத்துடன் நாங்கள் அணியும் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 14, 2026
சசிகலாவிற்கு புகழேந்தி வேண்டுகோள்!

புரட்சி அதிமுக என்ற கட்சியை நிறுவிய புகழேந்தி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் சசிகலா குறித்து பேசுகையில், 9 வருடங்களாக சசிகலா எங்கே சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினார். அவர் கட்சி துவங்கியிருப்பது நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்றவர், தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும்; தற்போது பேசிவிட்டு மீண்டும் அமைதியாகி மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதே தனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.


