News August 5, 2024
மகளிர் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் அக்.3 முதல் அக்.20 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. தற்போது அங்கு வன்முறை வெடித்து ராணுவ ஆட்சியின் கீழ் அந்நாடு சென்றுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை அங்கு நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வன்முறை குறைந்தால் மட்டுமே அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News February 8, 2026
2032-ல் மோதும் சிறுகோள்.. பாதிப்பு ஏற்படுமா?

60 மீ அகலமுள்ள YR4 சிறுகோள் வரும் டிச.22, 2032-ல் சந்திரன் மீது மோதுவதற்கு 4.3% சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிறுகோள் 2024-ல் பூமியை தாக்கும் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது விலகிச் சென்றது. தற்போது YR4 சிறுகோள் சந்திரன் மீது மோதினால், அந்த சிதறலில் இருந்து உருவாகும் விண்கற்கள் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.
News February 8, 2026
ஜன நாயகன் படம்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

‘ஜன நாயகன்’ படத்தை வெளியிட கோர்ட் வரை சென்றும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே விஜய்க்கு நெருக்கமானவராக அறியப்படும் விஷ்ணு ரெட்டி, அமித்ஷாவை நேரில் சந்தித்ததாக முன்னணி நாளிதழில் செய்தி வந்துள்ளது. காங்கிரஸை தள்ளி வைக்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளாராம். இதனால் விரைவில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News February 8, 2026
பிப்.12-ல் நாடு தழுவிய ஸ்டிரைக்!

மத்திய அரசை கண்டித்து வரும் பிப்.12-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.


