News August 5, 2024

தமிழ் வெப்சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி

image

விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் தமிழில் புதிய வெப் சீரிஸ் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’ஃபார்ஸி’ வெப் சீரிஸ் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து, ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ புகழ் மணிகண்டனுடன் இணைந்து தமிழில் அவர் இணையத்தொடர் நடிக்கவுள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடருக்கு ‘முத்து என்கிற காட்டான்’ என பெயரிடப்பட்டுள்ளதாம்

Similar News

News March 24, 2026

BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது

image

தங்கம், வெள்ளி விலை நேற்று முதல் ஏற்ற இறக்கங்களுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்த நிலையில், மாலை ₹10 அதிகரித்துள்ளது. இதன்படி, தற்போது 1 கிராம் வெள்ளி ₹250-க்கும் 1 கிலோ ₹2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

News March 24, 2026

மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

image

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 24, 2026

நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

image

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!