News August 5, 2024
நினைவேந்தல் நிகழ்ச்சியில் துணை மேயர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி நினைவேந்தல் நிகழ்ச்சி அங்கனூரில் இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டார். உடன் கடலூர் மாநகர செயலாளர் செந்தில், கடலூர் நகர செயலாளர் செங்கதிர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News November 11, 2025
கடலூர் மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <
News November 11, 2025
கடலூர்: சாலையோரம் பிணமாக கிடந்த நபர்

கடலூர் புதிய பைபாஸ் சாலையில் நேற்று இரவு ராமாபுரம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் டூவீலருடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


