News August 5, 2024
பால் குடிப்பது ஆபத்தானதா?

தாய்ப்பால் அல்லாத மற்ற உயிரினங்களின் பாலில் உள்ள வேதிப் பொருட்களை மனித உடல் செரிமானம் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், பல ஆண்டு காலமாக மனிதன், பசும்பாலை அருந்தி வருவதால் பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படுவதில்லை. மேலும், பாலில் கால்சியம் உள்ளிட்ட பல முக்கிய நன்மை செய்யும் சத்துக்கள் இருப்பதால், பால் மற்றும் பால் தொடர்பான உணவுகளை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News February 8, 2026
4 சிம்கள், 75GB டேட்டா.. ₹449 மட்டுமே

ஜியோ ஃபேமிலிக்கான புதிய போஸ்ட்பெய்ட் பிளானை ₹449-ல் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் குறைவான மாத கட்டணத்தில் ₹449-க்கு மெயின் சிம்முடன் சேர்த்து மொத்தம் 4 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். அனைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளும், மொத்தமாக 75GB டேட்டாவும் வழங்கப்படும். இதன்மூலம் தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதைவிட, குடும்பத்திற்கே ஒரே பில்லில் குறைந்த செலவில் நிர்வகிக்கலாம்.
News February 8, 2026
நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. அதிர்ச்சித் தகவல்

நடிகை ராஜேஸ்வரி தற்கொலை தொடர்பாக சக நடிகர் பழனியப்பன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இறப்பதற்கு முன் ராஜேஸ்வரி குழப்பத்தில் இருந்ததாகவும், அவரது மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜேஸ்வரி இதுகுறித்து பேசியபோது சரியாக கேட்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்த பழனியப்பன், பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் தவறான முடிவெடுத்துவிட்டதாக சோகத்துடன் கூறியுள்ளார்.
News February 8, 2026
8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வயிற்றில் குழந்தையை சுமக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? பண்ருட்டி அருகே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(26) என்பவர்தான் காரணம். இந்த கொடூரன் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால், மாணவி கர்ப்பமாக இருக்கிறாள். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். தற்போது, கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.


