News August 5, 2024
இந்திய-வங்கதேச எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, இந்திய-வங்கதேச எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கலவரம் தொடர்வதால் எல்லை பாதுகாப்பு படையினர் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கதேச விவகாரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News January 31, 2026
துப்பாக்கிச் சத்தத்தால் அதிரும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் டோல்காமில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூட்டில் நடத்தியுள்ளனர். ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய ‘ஆபரேஷன் த்ராஷி-I’-ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் ராணுவம், போலீஸ் மற்றும் CRPF இணைந்து அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்து, இணைய சேவையையும் தடை செய்துள்ளனர்.
News January 31, 2026
மக்களை சந்திக்கிறார் விஜய்..!

பிப்ரவரி மாதத்தில் தவெக சார்பில் வேலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான உரிய அனுமதியை பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளதாம். காவல்துறையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய் மக்களை சந்திப்பார் என்கின்றனர். ஈரோடு பிரச்சாரத்திற்கு பிறகு சுமார் 2 மாதங்களுக்கு விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்தது

தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.31) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹950 குறைந்து ₹14,900-க்கும், சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.


