News August 5, 2024
ஜெய்சங்கருடன் மீனவ சங்க நிர்வாகிகள் சந்திப்பு

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர். இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்.
Similar News
News March 18, 2026
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க. SHARE பண்ணுங்க.
News March 18, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று காலை 1 அவுன்ஸ் $9 உயர்ந்த நிலையில், மாலையில் $150 குறைந்து $4,851-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $2.97 குறைந்து $76.95-க்கு விற்பனையாகிறது. இதன் எதிரொலியால், நாளை இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 18, 2026
தாக்கப் போகிறோம்… சொல்லி அடிக்கும் ஈரான்

அடுத்த சில மணி நேரங்களில் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் & சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. UAE, சவுதி அரேபியா & கத்தாரில் உள்ள ஆலைகளின் செயற்கைகோள் படங்களையும் வெளியிட்டுள்ள ஈரான் ராணுவம் அந்த ஆலைகளுக்கு அருகிலுள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளது.


