News August 5, 2024

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: மம்தா

image

வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள், நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அவர், இந்த விவகாரத்தில் 2 நாடுகள் சம்பந்தப்பட்டதால் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம் எனக் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

பியூஷ் கோயலின் தமிழக பயணம் ரத்து.. ஏன்?

image

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் இன்றைய தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவை டெல்லியில் EPS சந்தித்த நிலையில், 4 நாள்களில் கூட்டணி பங்கீடு முடிவடையும் என கூறினார். இதனையடுத்து நேற்று டெல்லிக்கு சென்ற TTV தினகரன், அன்புமணி ஆகியோர் இன்றுதான் அமித்ஷாவைச் சந்தித்து சீட் கணக்கீட்டை பேசவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் அதிமுக கூட்டணியில் அடுத்த நகர்வு இருக்கும்.

News March 21, 2026

இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியே வராதீங்க

image

கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெப்ப அலை காரணமாக மதிய நேரத்தில் வெளியே வந்தால் உடல் நீர் இழப்பு (Dehydration) வேகமாக நடக்கும். இதனால் சன் ஸ்ட்ரோக் (Heat stroke) போன்ற ஆபத்து அதிகம் என்பதால் குழந்தைகள், முதியோர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2026

எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்ணீங்க என தெரியணுமா?

image

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் போன் பயன்படுத்துகிறோம் என தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுடையது ஆண்ட்ராய்டு போன் என்றால், Settings-ல் Digital Wellbeing & Parenting Option-க்கு செல்லுங்கள். எந்த ஆப்பில் அதிக நேரம் செலவிட்டுள்ளீர்கள் என்பது தெரிந்துவிடும் *Iphone-களில் Screen Time app & the Attentive app என்ற ஆப்ஷனில் இதனை தெரிந்து கொள்ளலாம். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!