News August 5, 2024
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டிவனம் அருகே சிங்கனூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் தன்னுடைய இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக அனுகியபோது, விஏஓ தனவேல் மற்றும் உதவியாளர் ஏழுமலை ஆகியோர் முருகன் என்பவரிடம் இருந்து ரூபாய் 5000 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும். இது ஒரு பத்துநாள் திருவிழாவாகும், அதனை முன்னிட்டு விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News August 27, 2025
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தில் உள்ள விநாயகர் சிற்பம், தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிற்பமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இச்சிற்பத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. அறிஞர்களின் ஆய்வில், இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பல்லவர் காலத்திற்கு முந்தைய விநாயகர் வழிபாட்டிற்குச் சான்றாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 27, 2025
திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் 3 பேர் பலி.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். செப். 4 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை, மகன் ஆகியோர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க. நிர்வாகியான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.