News August 5, 2024

ஈரான் மசூதியில் சிகப்பு கொடி.. இதுதான் அர்த்தமா?

image

ஈரானில் ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலையை இஸ்ரேல் அரங்கேற்றி இருக்கும் எனக் கருதும் ஈரான், இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், பழிவாங்கலை பிரகடனப்படுத்தும் விதமாக ஈரானில் உள்ள மசூதியில் சிகப்புக் கொடி இன்று ஏற்றப்பட்டது. இதையடுத்து, ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது.

Similar News

News March 25, 2026

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு திருவிக நகர் தொகுதியா?

image

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவரின் மனைவி பொற்கொடி, புதிதாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி இணைந்துள்ள நிலையில், பொற்கொடிக்கு திருவிக நகர் தொகுதி ( தனி) ஒதுக்க EPS சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

News March 25, 2026

தங்கம் விலை.. நிபுணர்கள் சொல்வதென்ன?

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று 3% உயர்ந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் 4,544 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது வரும் நாள்களில் மேலும் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அத்துடன், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. நேற்று போலவே இன்றும் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளை கடந்துள்ளது. இந்த வர்த்தக மாற்றத்தால் தங்கம் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

News March 25, 2026

கமல் தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணமா?

image

வரும் தேர்தலில் மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது. இதனை மறுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தான், தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார் கமல். இந்நிலையில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மநீமவுக்கு பலனில்லை என்பதால்தான் கமல் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் என பேசப்படுகிறது.

error: Content is protected !!