News August 5, 2024
செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. இதி, சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ம) சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
Similar News
News March 13, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “சாலையில் முழு கவனம் தேவை; செல்போனை கீழே வையுங்கள்” என அறிவுறுத்தியுள்ள போலீசார், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
News March 13, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு ஒன்றை இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நியர்களிடமிருந்து வரும் அரட்டை கோரிக்கைகளை ஏற்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. உங்கள் வீடியோ அரட்டைகளை பதிவு செய்து மிரட்டல் விடுக்கப்படலாம். சைபர் கிரைம் நிதி மோசடி உதவி எண் 1930 பயன்படுத்தி கொள்ளலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
News March 13, 2026
கிருஷ்ணகிரி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8682928640-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE.


