News August 5, 2024
குறைதீர் கூட்டத்தில் 375 மனுக்கள் பெறப்பட்டன

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 375 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News March 12, 2026
சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு வயது 65. இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பா.மனோகரனின் சகோதரர் ஆவர். தற்போது மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிட பல்வேறு நபர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
News March 12, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீஸ் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 11, 2026
சிவகங்கை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


