News August 5, 2024
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்கீட் கலப்பு பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள், அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி செளகான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 146 புள்ளிகளுடன் இந்திய ஜோடி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து வெண்கல பதக்கத்துக்காக நடைபெற உள்ள போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
Similar News
News April 13, 2026
ராமநாதபுரம்: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

ராமநாதபுரம் மக்களே வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.
News April 13, 2026
பிறந்த நாளிலேயே அடக்கம் செய்யப்பட்ட நடிகையின் உடல்

சீரியல் நடிகை சுபாஷினியின் மரணம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த நாளிலேயே (ஏப்.12) அவரது <<19638476>>உடல் அடக்கம் <<>>செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள், இந்தாண்டு சோகமான நாளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்.21-ம் தேதி அவருக்கு கல்யாண நாளாகும். சுபாஷினிக்கு மகிழ்ச்சிகரமான மாதமாக இருந்த ஏப்ரல், தற்போது குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.
News April 13, 2026
பெட்ரோல், டீசல் விலை உயரும்… புதிய தகவல்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு $100-ஐ தாண்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை $150-ஐ எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். <<19636592>>டிரம்ப் அறிவிப்பு<<>> நடந்தால், தினசரி 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும். இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


