News August 5, 2024
திண்டுக்கல்லில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு

திண்டுக்கல் முனிசிபல் காலனியில் உள்ள SKY WAY – என்னும் தனியார் அலுவலகத்தில் இன்று கரூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சி பி சி ஐ டி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் சோதனையிட்ட பின் சோதனை நிறைவு பெற்றது என தெரிவித்தனர்.
Similar News
News March 5, 2026
சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்: கேஸ் பில்லை விட அதிக பணமா?

திண்டுக்கல் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


