News August 5, 2024
கடும் வீழ்ச்சியில் அமெரிக்க நிறுவனங்கள்

உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட பல பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க பொருளாதார கொள்கைகள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், உலகின் முன்னணி நிறுவனங்களான NVidia – 11%, கூகுள் – 11%, ஆப்பிள் – 10%, பேஸ்புக் – 10%, டெஸ்லா – 10%, அமேசான் – 10%, மைக்ரோசாஃப்ட் – 9% என கடும் சரிவை சந்தித்துள்ளன. இனி வரும் சில மாதங்கள் சவாலானதாக இருக்கக்கூடும்.
Similar News
News January 15, 2026
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல், வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள், மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துகள் *மங்களம் பொங்கட்டும், மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும், எண்ணியது ஈடேற.. தைப்பொங்கல் வாழ்த்துகள் *தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்கட்டும்.
News January 15, 2026
ELECTION: 200 தொகுதிகளில் திமுக போட்டி?

தவெகவை கைகாட்டி ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்டு வருகிறது. ஆனால், பங்கு கொடுக்க முடியாது என பிடிவாதத்தில் இருக்கும் திமுக, கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், அதற்கு மாற்று வியூகத்தை வகுத்துள்ளதாம். தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 20-ம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாம்.
News January 15, 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான அறுவடை திருநாளை பொங்கல் வைத்து வரவேற்க சிறப்பு நேரங்கள் உள்ளன. அதன்படி, சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6 மணி வரையாகும். இந்த நேரத்தில் வைக்க முடியாதவர்கள் காலை 7:45 முதல் 8:45 வரை அல்லது 10:35 முதல் 11:30-க்குள் வைக்கலாம். அனைவரது இல்லங்களிலும் அன்பு, இன்பம் பொங்க Way2News சார்பாக வாழ்த்துகிறோம். #பொங்கலோ பொங்கல்.


