News August 5, 2024
‘தளபதி 69’ லுக் டெஸ்ட் முடிந்தது?

நடிகர் விஜய் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ‘தளபதி 69’ படத்தில் விஜய்யின் தோற்றத்தை படக்குழு இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த ஆக. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாகவும், செப்.5 ஆம் தேதி ‘தி கோட்’ படம் வெளியான பின்பு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 17, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 75 படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 3 மாதங்களாக புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லையாம். அவரது நடிப்பில் ‘கருப்பு’ உள்ளிட்ட 3 படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது த்ரிஷாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
News March 17, 2026
பதற்றத்தில் புக் செய்யாதீங்க.. இந்தியன் ஆயில்

வீட்டு உபயோக LPG சிலிண்டர் தடையின்றி கிடைப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பீதியில் வீட்டு சிலிண்டர்களை முன்னெச்சரிக்கையாக புக் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதாகவும், பதற்றத்தில் மக்கள் தேவையின்றி கேஸ் புக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
News March 17, 2026
ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டை நிர்வகித்து வந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் தங்களுக்கு சாதகமான அரசை அமைக்க விரும்பும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அங்குள்ள தலைவர்கள் தான் தங்கள் முதல் டார்கெட் என கூறும் நிலையில், லரிஜானி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரானிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


