News August 5, 2024
ஒலிம்பிக்கில் 28 பதக்கம் வென்ற பெல்ப்ஸ்

ஒலிம்பிக்கில் தனி நபராக அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் வைத்திருக்கிறார். இதுவரை அவர் மொத்தம் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கை மட்டும் 28 (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்). குறிப்பாக, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் அவர் 8 தங்கப்பதக்கங்கள் பெற்றார். இந்த இரண்டு சாதனைகளையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
Similar News
News January 14, 2026
பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். மற்றவர்கள், காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரையும், 10.35 முதல் பகல் 1 மணி வரையும் பொங்கல் வைத்து வழிபடலாம். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும். ஹேப்பி பொங்கலோ பொங்கல்!
News January 14, 2026
இதெல்லாம் ஆரோக்கியமற்ற உணவுகள் தெரியுமா? PHOTOS

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT
News January 14, 2026
புதுவையில் புதிய கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK), என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், LJK-வுக்கு 2 இடங்கள் ஒதுக்க NR காங்., ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதுவையில் தவெக உடன் NR காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், அரசியல் களத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


