News August 5, 2024
நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்

திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு – பூம்புகார் மீனவர்களிடையே கடலில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக, ஏற்கெனவே இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 9, 2026
திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் ரித்தீஸ்(17). இவரும், இவருடைய உறவினரான நரேஷ்(18) என்பவரும் நேற்று(பிப்.8) பைக்கில் பெரியபாளையம் சென்று திரும்பிய போது மாநில நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதினர். இதில், தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் ரித்தீஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னால் சென்ற பைக்கை ஓட்டிய பரசுராமன்(35), நரேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 9, 2026
கும்மிடிப்பூண்டியில் ரயிலில் இருந்து குதித்து பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


