News August 5, 2024
ALERT: இங்கெல்லாம் கனமழை கொட்டித்தீர்க்கும்

தமிழகத்தில் காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை ராணிப்பேட்டை, தி.மலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையில், 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News January 15, 2026
சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்குதா? உஷார் மக்களே!

சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படுகிறதா? இது வெறும் அஜீரணமல்ல; பித்தப்பை கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். *சாப்பிட்டதும், வலது மேல் வயிறு அல்லது மேல் முதுகில் வலி, வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். *பெண்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.
News January 15, 2026
பொங்கலுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

பொங்கல் முடிவடையும் ஜன.17-ம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் புதன், லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகிறார். இதனால் ரிஷபம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களின் பதவி உயர்வு பெற்று நிதி நிலைமை மேம்படும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. நல்ல சம்பளத்துடன் வேலை, நகை வாங்குதல், புதிய வீடு (அ) மனை வாங்குதல் உள்ளிட்ட சுபகாரியங்கள் நிகழும்.
News January 15, 2026
நிலவில் சொகுசு ஹோட்டல்!

அமெரிக்காவை சேர்ந்த GRU Space நிறுவனம், நிலவில் முதல் சொகுசு ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கட்டுமானத்தை 2029-ல் தொடங்கி, 2032-க்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஒருவர் தங்குவதற்கு (5 நாள்கள்) சுமார் ₹90 கோடி செலவாகும் என கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவுகளையும் அந்நிறுவனம் இப்போதே தொடங்கியுள்ளது. நிலவில் தங்குனா எப்படி இருக்கும்?


