News August 5, 2024
ராமேஸ்வரம் பள்ளியில் அக்னிபாத் விழிப்புணர்வு கூட்டம்

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று இந்திய பாதுகாப்பு படையில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் சேர்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் கணேசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். சென்னை தாம்பரம் இந்தியன் விமானப்படை அலுவலர் சார்ஜன்ட் கணிக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News September 10, 2025
அதிர்ந்த பரமக்குடி; 7000 போலீசார் குவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 7000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News September 10, 2025
பரமக்குடி: குரு பூஜைக்கு 23 நிபந்தனைகள் – ஆட்சியர்

பரமக்குடியில் (செப்.11) இமானுவேல் சேகரனாரின் குரு பூஜை நடைபெற இருக்கிறது. பூஜைக்கு வரும்போது அனுமதி பெற்று சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும்; திறந்த வெளியில் வரக்கூடாது. மேலும், வாகனங்களில் ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது, ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சிங்ஜித் காலோனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 10, 2025
இராமநாதபுரம் பைக் விபத்தில் ஒருவர் பலி

அரியலூர் தேவமங்கலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன்(35). இவர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இவர் இரு சக்கர வாகனத்தில் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.