News August 5, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 8, 2026
திருவள்ளூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். திருவள்ளூர் மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா கடைகளுக்கான ஒப்பந்தம்

பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் 17.02.2026 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி வரை பெறப்படுகிறது. அன்றைய தினத்திலே (17.02.2026) காலை 11.30 மணிக்கு 9 வருடங்களுக்கு (3 வருடங்களுக்கு ஒருமுறை குத்தகை தொகையில் 15% உயர்த்தி குத்தகை உரிமம் புதுப்பிக்கப்படும் மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள ஏலம் விடப்பட்டுகிறது.
News February 8, 2026
திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


