News August 5, 2024
கோவையில் அமைச்சர் கே.என்.நேரு

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
Similar News
News February 3, 2026
கோவை: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5. <
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News February 3, 2026
தேக்கம்பட்டி: விபத்தில் இளைஞர் பலி

தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்(22). தனியார் சலூன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு பைக்கில் குருந்தமலை கோவிலில் நடைபெற்று வரும் தேர்த்திருவிழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். குரும்பனூர் அருகே சென்ற போது எதிர்பாராதமாக சாலையோர கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 3, 2026
மதுக்கரையில் பெண் யானை உயிரிழப்பு

மதுக்கரை வனச்சரகத்தில் பூலாம்பட்டி நவக்கரை வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இன்று பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது வனத்துறையினரின் ரோந்து பணியில் தெரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிற்கு தகவல் அளித்தார். பிரேத பரிசோதனைக்கு அறிக்கை பின்னரே யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


