News August 5, 2024
சூப்பர் ஹிட் படங்களை தவற விட்ட விஜய்

நடிகர் விஜய் வளர்ந்து வந்த காலத்தில் தவற விட்ட ஐந்து சூப்பர் ஹிட் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த ‘தீனா’, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’, தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தூள்’, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ ஆகிய படங்களை விஜய் தவறவிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
ஈரானின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் கொமேனி

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி போர் கப்பல் ஈரானை நெருங்கியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஈரானின் உச்சபட்ச தலைவரான கொமேனி, தனக்கு அடுத்த தலைவராக வேண்டியவர் யார் என்பதை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தலைவர் பட்டியலில் அவரின் மகன் மொஜ்தபா உள்பட 3 பெயர்கள் உள்ளதாம். US தாக்குதல் நடத்தலாம் என்பதால் கொமேனி ரகசிய பாதாள அறையில் தலைமறைவாக உள்ளார்.
News January 28, 2026
முத்தக் காட்சியால் நடிகை மீனா கண்ணீர்

‘அவ்வை சண்முகி’ படத்தில் கமலுடன் முத்தக் காட்சியில் நடத்த அனுபவம் குறித்து நடிகை மீனா பேசியது SM-ல் வைரலாகி வருகிறது. அதில், முத்தக் காட்சியில் நடிக்க துளியும் உடன்பாடு இல்லை; என்னால் இதை செய்ய முடியாது என அம்மாவிடம் சொல்லி புலம்பினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோதே ஷாட் ரெடி எனக் குரல் கேட்டதால் பயத்தில் கண்ணீர் வடித்ததாகவும் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்: மம்தா பானர்ஜி

அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி, அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். NDA-வில் இருந்த அஜித் பவார் வெளியேற இருந்த சூழலில் இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், SC கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். SC தவிர்த்து வேறு எந்த அமைப்பின் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.


