News August 5, 2024

ஏழைகளின் வீட்டுக்கனவை அரசே தகர்ப்பதா?: ராமதாஸ்

image

வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதிக்கட்டணம் உயர்வுக்கு, ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112% அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை, தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களை பாதிக்காமல், அரசு தன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 26, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 26, 2026

தனது நண்பருக்கு CM ஸ்டாலின் சிறப்பு வாழ்த்து!

image

தமிழகத்தில் இருந்து பத்ம விருது பெறத் தேர்வான அனைவருக்கும் CM ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்ம பூஷன் விருது பெறும் டென்னிஸ் வீரரும், தனது நண்பருமான விஜய் அமிர்தராஜுக்கும், நடிகர் மம்மூட்டிக்கும் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தங்களது துறைகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து, சமூகத்திற்கு சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

ஜனவரி 26: வரலாற்றில் இன்று

image

*1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவரானார். *1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது. *2001 – குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர். *1956 – தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர் & இயக்குநர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த தினம் *2015 – புகழ்பெற்ற கேலிச் சித்திர ஓவியர் ஆர். கே. லட்சுமண் நினைவு தினம்.

error: Content is protected !!