News August 5, 2024

உலக அழகி போட்டியில் தாய் – மகள் வெற்றி

image

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ‘ராயல் க்ரூஸ்’ என்ற கப்பலில் உலக அழகி போட்டி நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த ஹெலன் நளினி ‘மிஸ் ஸ்பிரிட் ஆப் வோர்ல்டு யுனிவர்ஸ்’ மற்றும் ‘மிஸஸ் இன்டர்நேஷனல் வோர்ல்டு பீப்பிள்’ பட்டங்களையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி ‘மிஸ் வோர்ல்டு யுனிவர்சல் 2024’ பட்டத்தை வென்றுள்ளார்.

Similar News

News March 13, 2026

சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

image

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/ பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் அதேப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று அதேப் பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17 வயது மாணவி, பொருள் வாங்க வந்த போது, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 13, 2026

சென்னை டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

image

பிளாஸ்டிக் பாட்டில்களில் பொதுமக்களுக்கு பெட்ரோல் வழங்குவது ஆபத்தானது மற்றும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து விற்பனை நிலையங்களிலும் கேன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என சென்னை புறநகரில் உள்ள இந்தியன் ஆயில் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!