News August 5, 2024

விஜய் பாடல் என்பதால் ஸ்பெஷல்: கங்கை அமரன்

image

‘G.O.A.T’ படத்தின் “ஸ்பார்க்” பாடலை 10 நிமிடங்களில் எழுதியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பதாகவும், அதில் ஒரு பாடலாகவே இதையும் கருதுவதாக தெரிவித்துள்ளார். மற்றபடி, விஜய் என்ற பெரிய ஹீரோவுக்கு எழுதியதால், இந்த பாடல் ஸ்பெஷலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பாடலை பதிவு செய்யும்போதே சிறப்பாக இருப்பதாக விஜய் கூறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Similar News

News January 30, 2026

திமுகவின் திடீர் ஊதுகுழல் போல பேசும் EPS: தவெக

image

கரூரில் 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் காரணம் EPS கூறிய நிலையில் அவருக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் சம்பவத்தில் அன்று உண்மையை உரக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் EPSக்கும், இன்று திமுகவின் திடீர் ஊதுகுழல் போல, தான் பேசியதையே மாற்றிப் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் EPSக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்றும், மக்களின் தலைவர் விஜய் என்பதை காலம் விரைவில் புரிய வைக்கும் எனவும் கூறியுள்ளார்.

News January 30, 2026

காலை நேரத்தில் இந்த உலர் பழங்களை சாப்பிடாதீங்க!

image

காலை வெறும் வயிற்றில் சில உலர் பழங்களை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் உலர்ந்த அத்திப்பழம் செரிமான கோளாறு மற்றும் வயிற்று அசெளகரியம் தரலாம். பேரீச்சம்பழம் அதிக சர்க்கரை இருப்பதால் காலை சாப்பிடுவது நல்லதல்ல. உலர் திராட்சை செரிமானத்திற்கு கடினமாக இருக்கலாம். ஆப்ரிகாட் காலை நேரத்தில் வயிற்றுக்கு ஏற்றதல்ல. எனினும் இந்த உலர் பழங்களை பகல் நேரத்தில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

News January 30, 2026

கூட்டணியை உறுதி செய்யும் EPS

image

விரைவில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை உறுதி செய்வதாகவே EPS பேச்சு பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸை நம்பாதீங்க என விஜய்யை சமீபத்தில் விஜய பிரபாகரன் எச்சரித்திருந்தார். அதாவது காங்., இருக்கும் கூட்டணியில் தேமுதிக இருக்காது என்பதே அதன் மறைமுக குறியீடாம்.

error: Content is protected !!