News August 5, 2024
பருவமழை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்

சென்னை கொளத்தூரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் எந்தளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய அளவில் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சியை காட்ட சொல்லுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Similar News
News February 4, 2026
சென்னை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

சென்னை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
தனியார் விடுதியில் பெணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: போரூர் தனியார் தங்கும் விடுதியில், வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த வெளிமாநில பெண்ணிடம் விடுதியின் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று(பிப்.4) போலீசார், உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெளிமாநில பெண் உடமைகள் அனைத்தும் உரிமையாளர் பறித்து கொண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News February 4, 2026
சைதாப்பேட்டையில் வாலிபர் போக்சோவில் கைது!

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், சக்திவேல் (31) என்பவர் பந்தல் பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை மகளிர் போலீசார், சக்திவேலை நேற்று(பிப்.3) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


