News August 5, 2024
5G சேவையில் களமிறங்கிய BSNL

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக, 5G சேவையில் பொதுத்துறை நிறுவனமான BSNL களமிறங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்களில் 5G சிம்கார்டுகள் விற்பனையை தொடங்கியுள்ளது. தொடர்ந்து, நாடு முழுவதும் இச்சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளது. ஏற்கெனவே, ஜியோ, ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் அதிருப்தியில் உள்ள வாடிக்கையாளர்கள் BSNL பக்கம் திரும்பி வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
போர் முழக்கத்தை உணர்த்தும் பீட்சா?

US-ன் பென்டகன் மாளிகையை சுற்றி பீட்சா விற்பனை அதிகரித்திருப்பது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், US ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது பென்டகனில் பணியாற்றுவோர் அதிகளவு பீட்சா ஆர்டர் செய்வார்களாம். இதன் அடிப்படையில், நாளை தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.
News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: CM-ன் சிறப்பு பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி ஆட்டத்தை மாற்றிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு CM ஸ்டாலின் சார்பில் ₹8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி (17 காளைகள்) 2-ம் இடத்தை பிடித்தார். சிறந்த காளையான மந்தை முத்துக்கருப்பனின் உரிமையாளர் விருமாண்டி பிரதர்ஸ்-க்கு DCM சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.


