News August 5, 2024

மாநிலங்களின் பிரச்னையாக உருமாறிய உருளைக்கிழங்கு

image

மேற்குவங்கத்தில் உணவு வகைகளில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில், ₹20க்கு விற்கப்பட்ட கிலோ உருளைக்கிழங்கு, தற்போது ₹50க்கு விற்பனையாகிறது. விலையை குறைக்க வெளிமாநிலங்களுக்கு அவற்றை ஏற்றுமதி செய்ய, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால், மாநில எல்லையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒடிஷா, ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை விண்ணை தொட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

பசுவின் பித்தப்பை கல்லுக்கு ₹5 லட்சமா?

image

தலைப்பு ஆச்சரியப்படுத்துகிறதா? சீன பாரம்பரிய மருத்துவத்தில் பித்தப்பை கற்களிலிருந்து, ‘அங்கோங் நியு ஹுவாங் வான்’ என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. பெரிய பசுக்களில் மட்டுமே அரிதாக இந்த கற்கள் கிடைப்பதால், கடந்த 2025-ம் ஆண்டு 28 கிராம் பசுவின் பித்தப்பைக் கற்கள் ₹5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதாம்.

News March 20, 2026

FLASH: மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியல்

image

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் விரும்பும் 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் மதிமுக வழங்கியுள்ளது. அதில், 1.மதுரை தெற்கு, 2.திருச்சி கிழக்கு, 3.வேளச்சேரி, 4.மணப்பாறை, 5.சாத்தூர், 6.கோவில்பட்டி, 7.கிணத்துக்கடவு, 8.நெல்லை, 9.பாளையங்கோட்டை, 10.கடலூர் (அ) புவனகிரி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், எதெல்லாம் கிடைக்க வாய்ப்புள்ளது?

News March 20, 2026

அடி வாங்குனவன் சொல்லணும்ல: அமீர்

image

ஜன நாயகன் படத்தில் என்ன பிரச்சனை என்று இருதரப்பும் சொல்லவே இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். ஜன நாயகனின் சென்சார் தாமதத்திற்கு அதில் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அடிச்சவன் சொல்லமாட்டான்… அடி வாங்குனவன் சொல்லணும்ல என்றவர், தன்னை இதற்காகத் தான் அடிக்கிறார்கள் என ஜன நாயகன் படக்குழு சொல்ல மறுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!