News August 5, 2024
உலகம் முழுவதும் 1.24 லட்சம் பேர் வேலையிழப்பு

நடப்பாண்டில் உலகம் முழுவதும் 1.24 லட்சம் ஊழியர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து 8,000 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இண்டெல் 15,000, மைக்ரோ சாஃப்ட் 1,000, யூகேஜி 2,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சமூக வலைதளமான எக்ஸ்-ன் (முன்னதாக ட்விட்டர்) மாற்று என அறியப்பட்ட KOO, அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
Similar News
News January 21, 2026
5 மாநில தேர்தலால் IPL தாமதமாகிறதா?

IPL 2026 மார்ச் 26-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை அட்டவணை வெளியிடப்படவில்லை. இதற்கு WB, TN உள்ளிட்ட 5 மாநில தேர்தலே காரணம் என்றும், தேர்தல் தேதியை ECI அறிவித்த பிறகே அட்டவணையை இறுதிசெய்ய IPL நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரேநேரத்தில் தேர்தலுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது சிக்கல் என்பதால் 18 நகரங்களில் IPL-ஐ நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாம்.
News January 21, 2026
BREAKING: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

OPS ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், OPS விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் OPS-ம் திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News January 21, 2026
தவெக தனித்துப் போட்டியா?

விஜய்க்கு ஆதரவாகவே பேசிவந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தவெகவுடன் கூட்டணி அமைப்பார் என பேசப்பட்டது. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக NDA கூட்டணியில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணசாமியும் மேடையேறுவார் என்றும் கூறப்படுகிறது. அமமுகவும் NDA கூட்டணியில் இணைந்துவிட்டதால் விஜய் தனித்தே களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


