News August 5, 2024
ஒருவரது வாழ்க்கையை அழிக்கும் பழக்கங்கள்

தத்துவஞானி சாணக்கியர் கூற்றுப்படி, 4 பழக்கங்கள் ஒருவரின் வாழ்வில் நுழைந்தால், அவர் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வருமானத்திற்கு அதிகமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ செலவு செய்வது, உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது, தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, சோம்பேறித்தனம், பேராசை ஆகிய பழக்கங்கள் மனிதனுக்கு அதிக இழப்பையும், மகிழ்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
Similar News
News January 18, 2026
மாதவிடாய் காலத்தில் ரத்த தானம் செய்யலாமா?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்வது தொடர்பான அச்சங்கள் கட்டுக்கதைகளே என டாக்டர்கள் விளக்குகின்றனர். *இது முற்றிலும் பாதுகாப்பானது *தானம் செய்யும் ரத்தம் வேறு, மாதவிடாய் ரத்தம் வேறு. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது *ரத்த தானம் அளிக்க ஹீமோகுளோபின் 12.5g/dL-க்கு மேல் இருக்க வேண்டும் *ரத்த தானம் செய்தால் Cramps அதிகமாகாது. ஆனால், Cramps, ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தானத்தை தவிர்க்கலாம்.
News January 18, 2026
BREAKING: சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை இன்று கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ ₹152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோழி 1 கிலோ ₹82-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை 30 காசுகள் குறைந்து ₹5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலை உயர்வால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் ₹240 – ₹300 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?
News January 18, 2026
கார் ரேசில் அஜித்துடன் Ride போகணுமா?

கார் ரேசிங்கில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். அவரை பார்த்து ஒருமுறை போட்டோ எடுத்துவிட மாட்டோமா என தவித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, அவருடன் கார் ரேசிங் போகவே ஒரு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு. வரும் 25-ம் தேதி, துபாயில் நடைபெறும் ரேசில் அவருடன் காரில் அமர்ந்து நீங்க பயணிக்கலாம். அதற்கு டோக்கன் பீஸாக ₹86,465 கட்ட வேண்டும். சில சீட்கள் மட்டுமே உள்ளன. யாருக்கெல்லாம் போக ஆசை?


