News August 5, 2024
நெல்லையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்

நெல்லை மாவட்டம் பழவூரில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியினை பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 12, 2026
அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

திருநெல்வேலி, கண்டியப்பேரி அரசு மருத்துவமனை மேலப்பாளையம் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் சுகாதார வசதிகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். காலை உணவுத் திட்ட பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
News March 12, 2026
திருநெல்வேலி: மனைவியை படுகொலை செய்த கணவன்

அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் முத்துப்பட்டன். இவர் தனது மனைவி சுதாவுடன் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சுதாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டிய முத்துப்பட்டனை கைது செய்தனர்.
News March 12, 2026
திருநெல்வேலி: 681 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, 4 தென் மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 681 கிலோ கஞ்சா நீதிமன்றங்களின் உத்தரவின் படி, திருநெல்வேலிசரக DIG ப. சரவணன் தலைமையில், இன்று (மார்ச்.12) காலை திருநெல்வேலி மாவட்ட S.P. டாக்டர் V. பிரசண்ண குமார் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாங்குளம் பொத்தையடி தனியார் நிறுவன ராட்சச அடுப்பில் வைத்து, தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.


