News August 5, 2024

நெல்லை மேயர் தேர்தல்: மற்றொரு கவுன்சிலர் வேட்பு மனு தாக்கல்

image

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திராவிடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல்‌ நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

Similar News

News March 19, 2026

நெல்லை: இனி 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

image

திருநெல்வேலி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

திருநெல்வேலி: 70 வயது முதியவரின் கொடூர மனம்!

image

கொண்டா நகரத்தைச் சேர்ந்த கணபதி (70) என்ற முதியவர் அங்குள்ள 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் அச்சத்துடன் தெரிவித்ததின் பேரில் சிறுமியின் தாயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சுத்தமல்லி போலீசார் கணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!