News August 5, 2024
தங்கம் Vs பங்குச்சந்தை

RBI தரவுகளின்படி, இந்தியர்கள் ரியல் எஸ்டேட்டில் 50.7%, தங்கத்தில் 15.5%, பங்குச்சந்தையில் 4.7% முதலீடு செய்துள்ளனர். இவற்றில், அதிகபட்சமாக பங்குச்சந்தை சுமார் 14% வருமானமும், தங்கம் 9.77% வருமானமும் கொடுத்துள்ளது. இந்நிலையில், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தை விட பங்குச்சந்தை நல்ல முதலீடாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம் தங்கம், பணவீக்க விகிதத்தை தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 22, 2026
கொரோனாவை ஒழிக்க முதல் லாக்டவுன் வந்த நாள்!

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பின்னர், மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற் கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?
News March 22, 2026
ஸ்டாலினுடன் சமரசம் பேசும் ப.சிதம்பரம்

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசித்து வருகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளிடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஸ்டாலினுடன் ப.சி., சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.