News August 5, 2024
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹51,760க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹6,470க்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி குறைவு காரணமாக தங்கத்தின் விலை மேலும் குறைந்தால், அதில் முதலீடு செய்யலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Similar News
News March 14, 2026
பெட்ரோல், டீசல்.. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தட்டுப்பாடும் இல்லை எனவும் இன்னும் 90 நாள்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
படங்களில் இது இல்லைனா இனி சென்சார் கிடையாது!

மார்ச் 15-ம் தேதி முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில் மற்றும் காட்சிகளை விவரிக்கும் ஒலி வடிவம் கட்டாயம் என சென்சார் போர்டு அறிவித்துள்ளது. காது கேளாதோர், பார்வையற்றோர் உள்ளிட்ட அனைவரும் படங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அம்சங்களுடன் சமர்ப்பிக்கப்படும் படங்களுக்கே இனி சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 13, 2026
விஜய்யுடன் கூட்டணியா? சசிகலா பதில்

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, கட்சியின் <<19370263>>சின்னத்தையும் <<>>அறிமுகம் செய்தார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார். மேலும், மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


