News August 5, 2024
நடனமாட கஷ்டப்பட்ட ராஷ்மிகா

‘புஷ்பா 2’ படத்தின் ‘SOOSEKI’ பாடலில் வரும் நடன அசைவுகள் சவாலானதாக இருந்ததாக, நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கை அசைவு காட்சிக்காக மட்டும் பல மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், பல டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பாடல் தமிழில் ‘சூடான’ என தொடங்குகிறது. விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ராஷ்மிகாவின் அந்த ஸ்டெப்தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
Similar News
News February 17, 2026
கடன் தள்ளுபடி: அமைச்சர் பட்டியலை வெளியிட்டார்

பட்ஜெட் தாக்கலின்போது, 2021-ல் கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டியலிட்டார். அதன்படி, ₹12,359 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள், ₹4,880 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ₹2,118 கோடி மதிப்பிலான கடன்களையும் அரசு தள்ளுபடி செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 17, 2026
கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை: ஷோடங்கர்

பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என கிரிஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், கூட்டணி உள்பட அனைத்து விசயங்கள் குறித்தும் 5 பேர் கொண்ட கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம் என்றும், அதுவரை யாரும் கூட்டணி தொடர்பான விவரங்களை பேசக்கூடாது; கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
இரட்டை சுழி காரணம் என்ன?

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும், அதிக சேட்டை செய்வார்கள் என்றெல்லாம் சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? பெற்றோருக்கோ, மூதாதையர்களுக்கோ இரட்டை சுழி இருந்திருந்தால் மரபணு மூலம் குழந்தைகளுக்கு அது வரலாம். அல்லது, கருவில் முடி வளர்ச்சியின் முறையை சார்ந்தும் சுழி ஏற்பட வாய்ப்புள்ளது. உலகில் 5% மக்களுக்கு மட்டுமே இரட்டை சுழி உள்ளது.


