News August 5, 2024
பேராசையில் ரூ.43 லட்சம் மோசடி

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணைய வழி பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.23.89 லட்சத்தையும் அதன் பிறகு, மீண்டும் ரூ.18.39 லட்சத்தை அவா் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 30, 2026
புதுச்சேரி: மனைவியின் பிரிவால் கணவன் தற்கொலை

புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்த கொத்தனார் பாண்டியன் (40), மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்தார். இவர் தனது தாயார் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
புதுவை: காவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் (போலீஸ் கான்ஸ்டபிள் ) பதவிக்கான எழுத்துத் தேர்வு, வரும் (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள ஐந்து மையங்களில் நடைபெற இருக்கின்றன. இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை தேர்வர்கள் https:// recruirtement .py.gov.in என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News January 30, 2026
புதுச்சேரி: பாஜக தேர்தல் படிவம் இன்று வெளியீடு

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளா்களிடம் கூறும்பொழுது, சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கடற்கரை காந்தி திடல் அருகே இன்று வெளியிடுகிறாா் என்றார்.


