News August 5, 2024
நாடாளுமன்றக்குழுக்களின் தலைவர்கள் நியமனம்?

நாடாளுமன்றத்தில் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள், தேர்தலின்றி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது கணக்குக்குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்.டி., எஸ்.சி. குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளன. இந்த குழுக்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருப்பர். ஒவ்வொரு குழுவுக்கும்
ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்.
Similar News
News February 3, 2026
AIR INDIA விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் கோளாறு

லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட AIR INDIA விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறை கண்டறிந்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார். இதையடுத்து அந்த விமானம், அதன் அசல் உபகரண உற்பத்தியாளரால் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், DGCA-வின் உத்தரவின்படி, அனைத்து போயிங் விமானங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அகமதாபாத் விமான விபத்து எரிபொருள் சுவிட்ச் பிரச்சனையால் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 3, 2026
ஒரே நேரத்தில் CM, விஜய்… உளவுத்துறைக்கு டோஸ்!

CM கான்வாய்க்காக விஜய் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாக டிவி நேரலையில் செய்தி வெளியானதை அடுத்து, உளவுத்துறைக்கு மேலிடத்தில் இருந்து கடும் ’டோஸ்’ விடுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. TVK 3-ம் ஆண்டு துவக்கவிழா பனையூரில் இன்று நடந்தது. அதேநேரம் மாமல்லபுரத்தில் நடந்த சுற்றுலா உச்சி மாநாட்டுக்கு CM சென்றார். எனினும் ஜோதிட காரணங்களுக்காக விஜய் முன்கூட்டியே சென்றதால் இப்படி நடந்ததாக சொல்லி IB சமாளித்ததாம்.


