News August 5, 2024
சென்னையில் மழை நீடிக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. உங்க ஏரியாவில் மழை பெய்யுதா?
Similar News
News March 13, 2026
சென்னையில் டீ, காபி விலை கடும் உயர்வு?

கள்ளச்சந்தையில் ஒரு காஸ் சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால், சென்னையில் டீ, காபி விலையை கடை உரிமையாளர்கள் இரட்டிப்பாக உயர்த்தி விட்டனர். சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகளில் டீ ரூ.20, காபி ரூ.25 என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
News March 13, 2026
சென்னையில் கொடுமையின் உச்சம்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சிலம்பரசன்(21). இவருக்கு அதேப் பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெண் வீட்டுக்கு வந்த சிலம்பரசன் பெண்ணின் 14 வயது தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 13, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


