News August 5, 2024

கடலூரில் கனமழை – விவசாயிகள் கவலை

image

வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்திருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.4) இரவு முதல் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆகஸ்ட் 5-ஆம் தேதியும் கடலூர் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 26, 2026

வடலூர்: ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5. 30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

கடலூர்: தனியார் விடுதியில் இளைஞர் தற்கொலை

image

புவனகிரி வட்டம், மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (26). திருமணமான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் அப்பெண்ணுடன் தங்கியிருந்த ஹரிதாஸ் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.25) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!