News August 5, 2024
காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்துஸ்தான் பல்கலை., பகுதியில் மட்டும் 10செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 8செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சிட்லப்பாக்கம், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Similar News
News February 9, 2026
மருந்துத் துறை தேசிய குடற்புழு நீக்க நாள் அறிவிப்பு

தேசிய குடற்புழு நீக்க நாள் திட்டமானது ஆகஸ்ட் 2015 முதல் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2025- 2026 ஆம் வருடத்தின் இரண்டாம் சுற்று பிப்.10 ஆம் தேதி அன்றும் விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.17 ஆம் தேதி அன்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் செலுத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 9, 2026
காஞ்சிபுரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


