News August 5, 2024

மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

image

மதுரையில் உள்ள புதூர், ஆனையூர், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களில் நாளை(ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர் துணைமின் நிலையம், ஆனையூர் துணைமின் நிலையம், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 2, 2026

மதுரை: ரூ.12 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

image

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் கழக மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஏழுமலை, உத்தபுரம், உசிலம்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, சோழவந்தான், விக்ரமங்கலம், செக்கானூரணி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, பாலமேடு பகுதியில் பலர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்தனர்.

News February 2, 2026

மதுரை: டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி

image

எழுமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டி மகன் ஹரிவர்ஷன்(9). இவர் நேற்று முன்தினம் எழுமலை சாலையில் சைக்கிளில் சென்றபோது, வண்ணாத்தி கோவில் அருகே பின்னால் வந்த டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஹரிவர்ஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பேரையூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முகேஷ்(20) என்பவரை கைது செய்து எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

மதுரை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!