News August 5, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இதனால், விடுமுறை அறிவிப்பு எதிர்பார்த்து பள்ளி மாணவர்கள் காத்திருகின்றனர்.

Similar News

News April 2, 2026

BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

image

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.

News April 2, 2026

₹1,000 கோடி ஊழல்.. நேருவை விமர்சித்த விஜய்

image

திருச்சி பிரசாரத்தில், அமைச்சர் KN நேருவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். இங்கு (திருச்சி) ஒரு அமைச்சர் உள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் என விமர்சித்தார். கல்லூரி உதவி பேராசிரியர் பணி 2,000 பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

News April 2, 2026

விடுமுறை.. 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு வரை 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 2,257 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) <>இணையதளத்தில்<<>> உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள்!

error: Content is protected !!