News August 5, 2024

ஆடி பிரதமையில் வணங்க வேண்டிய தெய்வம்

image

சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி பிரதமையில் (இன்று) பர்வதவர்த்தினியை வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு ஏலக்காய் மாலைச் சாற்றி, விளக்கேற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, பர்வதவர்த்தினி அஷ்டகம் மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால் வேண்டியவை அனைத்து நிறைவேறும் என்பது ஐதீகம்.

Similar News

News March 24, 2026

ராணிப்பேட்டை: மெடிக்கலில் மாத்திரை வாங்குறீங்களா?

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 24, 2026

மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

image

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 24, 2026

நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

image

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!