News August 5, 2024

லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை?

image

லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அறிவித்துள்ளார். பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாக்க வழிவகை செய்யும் சட்டத்தை அசாம் அரசு விரைவில் கொண்டு வரும் எனக் கூறிய அவர், இந்துக்கள் & முஸ்லீம்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2026

2 கிராம் தங்கம்.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜா, பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளார். மறைமலைநகர், காட்​டாங்​கொளத்​தூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், திமுக வேட்பாளரைவிட பாகம் அளவில் 100 வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம், 300 வாக்குகள் அதிகம் பெறுபவர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் என ஜாக்பாட் ஆஃபரை வெளிப்படையாக கூறியுள்ளார். இது SM-ல் விவாதமாக மாறியுள்ளது.

News March 30, 2026

BREAKING: எதிராக திரும்பிய தீவிர விசுவாசி.. EPS அதிர்ச்சி

image

நாமக்கல் தொகுதியில் EPS அறிவித்த வேட்பாளருக்கு எதிராக KPP பாஸ்கர் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். EPS-ன் தீவிர விசுவாசியான EX MLA பாஸ்கரின் இந்த முடிவு EPS தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக பாஸ்கரின் ஆதரவாளர்கள் நாமக்கல் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு பாஸ்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

FLASH: பெரிய இழப்பை கண்ட பங்குச்சந்தைகள்!

image

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 1,035 புள்ளிகள் சரிந்து 72,560 ஆகவும், நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 22,525 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, ICICI Bank, HDFC Bank, Axis Bank உள்ளிட்ட வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை கண்டுள்ளன.

error: Content is protected !!