News August 5, 2024

Olympics Day 11: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், பாய்மரப்படகு, ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் லக்‌ஷயா சென் களமிறங்கவுள்ளார். பெண்களுக்கான மல்யுத்தம் 68 கிலோ முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் நிஷா தாஹியா உக்ரைனின் சோவாவுடன் மோதவுள்ளார்.

Similar News

News March 18, 2026

கார்கே, சரத் பவாரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்: PM மோடி

image

ராஜ்யசபா பதவிக்காலம் முடியலாம், ஆனால் அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை என ஓய்வுபெறும் 37 ராஜ்யசபா MP-களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் PM மோடி பேசினார். தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதி காலத்தை பார்லிமெண்ட் பணிகளிலேயே செலவிட்ட தலைவர்கள் என்றார். புதிதாக தேர்வாகியுள்ள MP-க்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 18, 2026

தங்கம் விலை மேலும் குறைந்தது

image

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 11-ம் தேதி சவரன் ₹1,20,960-க்கு விற்பனையான தங்கம் 7 நாள்களில் ₹4,074 குறைந்து ₹1,16,560 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) $9 குறைந்து $4,990 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால் நாளையும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 18, 2026

IPL 360: CSK அணியில் கீப்பராகும் சஞ்சு?

image

*சஞ்சு சாம்சனை CSK அணியின் விக்கெட் கீப்பராக தோனி மாற்றலாம் என கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார் *இந்த வருடமும் MI-ல் ரோஹித் சர்மா, Impact பிளேயராக களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது *காயம் காரணமாக KKR வீரர் பதிரனா சில போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது *கடந்த ஆண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன், இந்த ஆண்டு DC அணியின் முக்கிய பவுலராக மாறலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!