News August 5, 2024
முதலீட்டை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்!

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கு இறுதி விலையாக, யூனிட் ஒன்றுக்கு ₹6,938 வழங்கப்படும் என்று RBI அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த (₹3,119) விலையைவிட, சுமார் 122% அதிகமாகும். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ₹3,819 லாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. முதலீட்டை திரும்பப் பெற இன்றே (ஆக.,5) கடைசி நாள் என்றும் RBI தெரிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $48 (இந்திய மதிப்பில் ₹4,400) குறைந்து $4,847.00-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
News February 2, 2026
முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், தவெக கொடியை விஜய் ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது 2026 தேர்தல் களப்பணி, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதி குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (1/2)

*சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் உள்ளிட்ட 7 அதிவேக ரயில் தடங்கள் அமைப்பு *மகளிர் தொழில் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில், SHE மார்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைப்பு *சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ₹10,000 கோடி நிதி ஒதுக்கீடு *புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்து வகைகளுக்கான இறக்குமதிக்கு முழு வரி விலக்கு *நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி ₹12.2 லட்சம் கோடியாக உயர்வு


